ராஜஸ்தான் பள்ளி பாடப்புத்தகத்தில் அபிநந்தன்: அமைச்சர் தகவல்
இந்திய விமானப்படையை சேர்ந்த அபிநந்தன் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் கைது செய்யப்பட்டு பின் இந்திய அரசின் அதிரடி நடவடிக்கையால் விடுதலை செய்யப்பட்டார்.
அபிநந்தனின் வீரத்தை அனைத்து இந்திய மக்களும் பாராட்டி வரும் நிலையில் அவரை மேலும் கெளரவப்படுத்தும்விதமாக அவரது வீர தீர சாகச செயல்களை, பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்யவுள்ளதாக ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சரான கோவிந்த் சிங் தோதாஸ்ரா முடிவு செய்துள்ளார்.
பயங்கரவாதிகளுடனான மோதலில் இன்னுயிரை தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்கள் குறித்தும் அம்மாநில பாடப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.