ராஜினாமா செய்தால் ரெய்டா? தமிழக எம்பிக்கள் தயக்கம்
காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒருசில எம்பிக்கள் ராஜினாமா முடிவை எடுத்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் ராஜினாமா செய்யும் எம்பிக்கள் ரெய்டு செய்யப்படுவார்கள் என தகவல்கள் கசிந்து வருவதால் ராஜினாமா செய்ய எம்பிக்கள் தயங்குவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்யாமல் டெல்டா பகுதியை சேர்ந்த எம்பி-களை மட்டும் ராஜினாமா செய்யச் சொல்லும் முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.
இருப்பினும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்தால் அதிமுகவின் பெருந்தலைகள் ரெய்டை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது