ராஜினாமா செய்த தலைமை நீதிபதியை சமாதானம் செய்த அமைச்சர்
மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி ராஜினாமா கடிதம் அளித்திருந்தார். ராஜினாமா செய்த தலைமை நீதிபதி தஹில் ரமாணியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சந்தித்து பதவியில் இருந்து விலகும் முடிவை கைவிட வலியுறுத்தி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி இன்று பணிக்கு வரவில்லை. இதனால் நீதிபதி தஹில் ரமாணி தலைமையிலான முதல் அமர்விற்கு இன்று 75 வழக்குகள் பட்டியலிடப்பட்டு இருந்தன. ஆனால் நீதிபதி தஹில் ரமாணி நீதிமன்றத்திற்கு வராத காரணத்தினால் 75 வழக்குகளும் 2வது அமர்வில் பட்டியலிடப்பட்டு உள்ளன. தஹில் ரமாணி அமர்வின் வழக்குகளை நீதிபதி அக்னிஹோத்ரி அமர்வு விசாரிக்கிறது.
அமைச்சரின் சமாதானத்தை ஏற்று தஹில் ரமாணி ராஜினாமா முடிவை கைவிட்டு பணிக்கு திரும்புவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்