ராணுவ கண்காட்சியை பார்வையிட ஒரு அரிய வாய்ப்பு

ராணுவ கண்காட்சியை பார்வையிட ஒரு அரிய வாய்ப்பு

மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை 12ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி பார்வையிடுகிறார்.

இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராணுவ கண்காட்சியை 14-ந்தேதி பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்கு ரூ.100 கட்டணம். அனுமதி சீட்டை பெற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதுபோன்ற ஒரு ராணுவ கண்காட்சி ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு கோவாவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply