ராணுவ பயன்பாட்டிற்கான ஜிஎஸ்எல்வி எஃப் 11 ராக்கெட்: இன்று விண்ணில் ஏவப்படுகிறது
ஜிஎஸ்எல்வி எஃப் 11 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.
ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஜிசாட் 7ஏ என்ற செயற்கைகோளும் செலுத்தப்படுகிறது ராணுவ பயன்பாட்டுக்காக இந்த செயற்கைகோள் ஏவப்படுவதாக விஞ்ஞானிகள் தகவல்
இந்த செயற்கைக் கோள் மூலம் போர்க்காலங்களில் விமானங்களின் இருப்பிடத்தை கண்டறிய முடியும். செயற்கைக் கோளின் தகவல் தொடர்பு சேவை, வான்வெளி தாக்குதலுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.