ராதாரவிக்கு ‘டத்தோ’ பட்டமே இல்லை: ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய சின்மயி
ராதாரவி தலைவராக இருக்கும் டப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டதை அடுத்து ராதாரவிக்கும் சின்மயிக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. ஊடகங்களில் பேட்டியளிக்கும்போது ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையின் சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் ராதாவிக்கு மலேசிய அரசு டத்தோ பட்டமே கொடுக்கவில்லை என்றும், அவர் போலியான பட்டத்தை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக மலேசியாவில் இருந்து வந்த ஆதாரத்தையும் பதிவு செய்துள்ளார்.
மலேசிய அரசு நடிகர்களில் ஷாருக்கானுக்கு மட்டுமே இந்த படத்தை கொடுத்துள்ளதாகவும், ராதாரவிக்கு இந்த பட்டம் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ராதாரவி என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்