ராதாரவி நீக்கம் தேர்தல் நேரத்து நாடகம்: தமிழிசை
நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக திமுக அறிவித்தது. இதனை கமல்ஹாசன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்பட பலர் வரவேற்றனர்.
இந்த நிலையில் ராதாரவின் சஸ்பெண்ட் குறித்து கருத்து கூறிய தமிழக பாஜக தலைவரும் தூத்துகுடி மக்களவை வேட்பாளருமான தமிழிசை, ‘நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு ஒரு தேர்தல் நேரத்து நாடகம். ஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பல ஆண்டுகளாக திமுக மேடைகளில் இருந்து வந்த போது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பெண்மையை பழிப்பது திமுகவின் வாடிக்கை’ என்று கூறியுள்ளார்.
ராதாரவி இதற்கு முன்னர் நடிகைகள் உள்பட பல பெண்களை பற்றி தரக்குறைவாக பேசியபோது திரையுலகினர்களும் அரசியல் கட்சிகளும் அவரை கண்டிக்கவில்லை என்றும், நயன்தாரா குறித்து பேசியபோது மட்டும் ஒட்டுமொத்த திரையுலகினர்களும் பொங்கியது ஏன் என்றும் நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது.அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு ஒரு தேர்தல்நேரத்து நாடகம்.ஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பலஆண்டுகளாக திமுகமேடைகளில் இருந்து வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?பெண்மையைபழிப்பது திமுகவின் வாடிக்கை
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) March 25, 2019