ரான்சம்வேர் ஹேக்கர்கள் கேட்ட ‘பிட் காயின்’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

ரான்சம்வேர் ஹேக்கர்கள் கேட்ட ‘பிட் காயின்’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

மோடி புண்ணியத்தில் இப்போதுதான் நாம் கேஷ்லெஸ் எக்கானமியை பற்றி தெரிந்துகொண்டோம். ஆனால், பல காலமாக பணமில்லா பரிவர்த்தனை மட்டுமே செய்துவருகிறார்கள் ‘பிட் காயின்” யூஸர்ஸ். எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? ரான்சம்வேர் அட்டாக் செய்தவர்கள் இந்த பணத்தை தான் கேட்டிருந்தார்கள். அத்தனை வல்லரசுகளின் கண்ணிலும் மிளகாய் தூளை தூவிவிட்டு எப்படி அவர்களால் பணம் பெற முடியும்? பிட் காயின் என்றால் என்ன?

பிட் காயின்

ஜப்பானைச் சேர்ந்த சடோஷி நாகாமோட்டோ என்பவரால், 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது பிட் காயின். நம் ரூபாயை எடுத்துக்கொள்வோம். அதன் அடிப்படை தங்கம் அல்லது வெள்ளி அல்லது டாலர் கையிருப்பு. நம் கையிருப்பை வைத்து அதற்கு உண்டான நாணயம்/கரன்ஸிதான் அச்சடிக்க முடியும். ஆனால், இந்த பிட் காயின்ஸ் என்பதே சில மின்னணுக்களின் மாறுதல்களே. ஆக, ஒரு கம்ப்யூட்டர் வழி உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் (software) இந்த வர்த்தகத்தின் நாடி.

கணித சூத்திரத்தில் உருவாக்கப்படுவதால் பிட் காயினின் அடிப்படை தங்கமோ, வெள்ளியோ இல்லை. இந்த கணித சூத்திரத்தில் 21 மில்லியன் பிட் காயின்கள் வரைதான் உருவாக்க இயலும். ஆனால், ஒரு பிட் காயின் சிறு பாகமாக குறைக்கப்பட்டு, மிகச்சிறிய அளவான, one hundredth millionth of a bitcoin உபயோகத்தில் உள்ளது. இது நம் ஆயிரம் ரூபாய் நோட்டை, ஆயிரம் ஒற்றை ரூபாயாக மாற்றுவது போல. இந்த மிகச்சிறிய அளவான பிட் காயின் பெயர் சடோஷி. இந்த கணித சூத்திரம் open source. அதாவது யார் எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம்.

இந்த முறையில் பரிவர்த்தனை நடத்த ஒரு சமூகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சமூகத்தில் (community) யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம்.

புதிய பயனர்களுக்கான அடிப்படை விவரங்கள்:
தொழில்நுட்ப உத்திகள் அறியாதவர்கள் கூட இந்த செயலியை எளிதில் உபயோகிக்கலாம். நம் கைபேசியிலோ, கணினியிலோ Bitcoin wallet செயலியை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்யும் போது ஒவ்வொரு உபயோகிஸ்தர்களுக்கும் ஒரு முகவரியை தருகின்றது. இந்த முகவரியை நண்பர்களிடம் பகிரப்படுவதன் மூலம் பணிபரிமாற்றங்கள் செய்து கொள்ளலாம். மின்னஞ்சல் முறை போன்றே இந்த செயலியின் செயல்பாடும், செயல்முறைகளும். தரப்பட்ட முகவரியைக் கொண்டு மேலும் பல முகவரிகளை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு முறை மட்டுமே ஒரு முகவரியை உபயோகிக்கலாம்.

கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், வங்கியில் நாம் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு முறைக்கும் சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த பிட் காயின் முறையில் எந்த கூடுதல் வசூலிப்பும் கிடையாது. ஆனால், பிட் காயினில் ஒரு முறை அனுப்பிவிட்டால் அதை ரத்து செய்ய இயலாது.

இருப்பு – தொகுப்பு தொடர்
முகவரியில் பொது குறிப்பேடு உள்ளடக்கப்பட்டிருக்கும். உறுதி செய்யப்பட்ட பரிமாற்றங்கள் அத்தொகுப்பில் பதிக்கப்படுகின்றது. இந்த முறையில் நாம் செலவழிக்க கூடிய இருப்புத் தொகை மற்றும் பரிமாற்றங்கள் குறித்து கணக்கிடப்பட்டு உறுதி செய்யப்படுகின்றது. பின் மூலதாரர்/உபயோகிஸ்தர் மூலம் செலவழிக்கப்படுகிறது

பரிமாற்றங்கள்
தனிப்பட்ட சில குறிப்புகள் மூலம் பரிவர்த்தனைகள் பரிமாற்றப்படுகின்றது (Password). பரிமாற்ற மதிப்பானது பிட்காய்ன் வாலெட் தொகுப்புத்தொடர் மூலம் பரிமாற்றப்படுகின்றது. பிட்காயின் வாலெட் ஒவ்வொரு பரிமாற்ற பதிவுகளை கடவுச்சொல் மூலம் பாதுகாப்பதால் பரிமாற்றங்கள் பாதுகாப்பினை நம்மால் உறுதி செய்ய முடிகிறது. பயனர்கள் கடவுச்சொல்லை வாக்கியம் அல்லது எண்களை ஆதாரமாக கொண்டு உபயோகிக்கலாம். கடவுச்சொல்லை பயனர்கள் விரும்பும் வகையில் தங்களுக்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு பரிமாற்றங்கள் முடிந்த பின்னும் மைனிங் (Mining) என்ற முறை மூலம் 10 நிமிடங்களில் உறுதிபடுத்தப்படுகின்றது.

செயல்முறை – மைனிங் (Mining)
கணக்கெடுப்பு முறை மூலம் பரிமாற்றங்கள் தொடர் தொகுப்பிற்கு அனுப்பப் படுகிறது. நேரத்திற்கு ஏற்ப தொடர் தொகுப்பிற்கு இரகசியமாக அனுப்பப் படுகிறது. கடவுச்சொல் விதிமுறைகள் படி ஒவ்வொரு பரிமாற்றங்களும் சோதிக்கப்பட்டு அதன் பின்பே வலைதளத்தில் உறுதிபடுத்தப்படுகின்றது.

இவை யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டன என்பதை கண்டு பிடிக்கவே முடியாது. நம்ம ஊர் தேர்தலை எடுத்துக்கொள்ளுங்கள். பணத்தை தெருவில் பெட்டியில் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும். ஆனால் பிட் காயினாகக் கொடுத்தால், யார் யாருக்கு எப்போது கொடுத்தார்கள் என்பதை சைபர் கிரைம் கூட கண்டுபிடிக்க முடியாது.

Leave a Reply