ராம்தாஸ் சொன்ன சொல் தவறாதவர்: கிண்டல் செய்கிறாரா சுப.வீரபாண்டியன்?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் ஒரு அணியாகவும், அதிமுக-பாஜக ஒரு அணியாகவும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இவை தவிர அமமுக தினகரன் தலைமையில் ஒரு அணி ஏற்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் பாமக எந்த அணியில் இணையும் என்பதே தற்போது அனைவரின் கேள்விக்குறியாக உள்ளது. திமுக அணியில் பாமகவை இணைத்து கொள்ள மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அதிமுக அணியை விட்டால் பாமகவுக்கு வேறு வழி இல்லை. எனவே அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சுபவீரபாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அதிமுகவுடன் பாமக கூட்டணி பற்றிப் பேசி வருகிறோம் என அன்புமணி ராமதாஸ் சொன்னதாகச் செய்திகள் வருகின்றன அது உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை. இனி எக்காலத்திலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு இல்லை என்று அவர்கள் சொன்ன சொல் தவறாதவர்கள் என்று கூறியுள்ளார். இது பாராட்டா? அல்லது கிண்டலா? என்று புரியாத நிலை தான் இதை படிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.