ரிலையன்ஸ் ஜியோவின் பேமெண்ட் பேங்க் தொடக்கம் எப்போது?
ஏர்டெல் உள்பட ஒருசில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பேமெண்ட் பேங்க் வசதியை கொண்டுள்ள நிலையில் வரும் டிசம்பர் முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவும் பேமென்ட் பேங்க் சேவையை துவங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜியோ நிறுவனத்திற்கு பேமெண்ட் பேங்க் தொடங்க கடந்த 2015ஆம் ஆண்டே மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் தற்போது இந்த பேமெண்ட் பேங்க் வசதியை ரிலையன்ஸ் தொடங்கவுள்ளது. முன்னதாக இந்த மாதமே பேமெண்ட் பேங்க் தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அது டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
மேலும் ஜியோ நிறுவனம் தனது பேமெண்ட் பேங்க் வசதியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.