ரிவர்ஸ் பார்க்கிங் அலர்ட் வசதி: சாலை போக்குவரத்துத்துறை அறிவிப்பு
ரிவர்ஸ் பார்க்கிங் அலர்ட் வசதி என்பது ஒரு வாகனம் ரிவர்ஸில் சென்று பார்க்கிங் செய்யும்போது பின்னால் ஏதேனும் வாகனம் அல்லது மனிதர்கள் அல்லது பொருள்கள் இருந்தால் சவுண்ட் அலர்ட் செய்யும் வசதி ஆகும். இந்த அலர்ட் வசதி இருந்தால் ரிவர்ஸ் பார்க்கிங்கின்போது விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம்
ஜூலை 2019 முதல் கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரிவர்ஸ் பார்க்கிங் அலர்ட் வசதியுடன் தயாரிக்க வேண்டும் என்றும் , இந்த விதி ஏப்ரல் 2020-ல் பேருந்து, ட்ரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் சாலை போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.