ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி படத்திற்கு பதில் சவார்கர் படம்: மத்திய அரசுக்கு கோரிக்கை
இந்தியா சுதந்திரம் ஆனமுதலே இந்திய கரன்சிகளில் மகாத்மா காந்தியின் உருவப்படம் இருந்து வரும் நிலையில் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
இந்துத்துவ இயக்கங்களின் முன்னோடியாக கருதப்படும் விநாயக் தாமோதர் சவாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சில அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரது பிறந்தநாள் நேற்று இந்த அமைப்பினரால் விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக சவார்கர் படத்தை இடம்பெறச்செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரத இந்து மஹாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவிக்க கூடாது என்று மத்திய அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அ