ரூபாய் நோட்டு பிரச்சனை காஷ்மீரை பாதிக்காதது ஏன்? புதிய தகவல்

ரூபாய் நோட்டு பிரச்சனை காஷ்மீரை பாதிக்காதது ஏன்? புதிய தகவல்
kashmir
பிரதமர் நரேந்திரமோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் காஷ்மீரில் மட்டும் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை. அங்குள்ள வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் வழக்கமான கூட்டமே உள்ளது.

இதுகுறித்து  காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் எலிசபெத் மரியம் கூறும்போது, ”ஏற்கெனவே நிலவி வந்த பதற்ற சூழல் காரணமாக சாதாரண மக்கள் யாரும் வீட்டில் அதிகப் பணத்தை வைத்திருக்கவில்லை. மாதச் சம்பளக்காரர்கள் அனைவரும் வங்கிக் கணக்குகள் மூலம் ஆன்லைனில் சம்பளம் பெறுகின்றனர். உடலுழைப்பு மூலம் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அனைவரும், தாங்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் செலவு செய்பவர்களாக இருக்கின்றனர். தொழிலதிபர்களும், நிறுவன உரிமையாளர்களும்கூட, எல்லைப் பிரச்சனை காரணமாக அதிகப் பணத்தை வீட்டில் வைத்திருக்கவில்லை. இதனால் ரூபாய் நோட்டு மாற்றம் காஷ்மீரில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது” என்று கூறியுள்ளார்

அதேபோல் ரூ.500, ரூ.1000 ஒழிக்கப்பட்டுவிட்டதால் தீவிரவாதிகளிடம் உள்ள இந்த பணம் வெறும் காகிதமாகிவிட்டது. எனவே கடந்த பத்து நாட்களாக எவ்வித தீவிரவாத வன்முறையும் இன்றி காஷ்மீர் அமைதிப்பூங்காவாக உள்ள்து. ‘கள்ள நோட்டுகள் புழக்கம் காரணமாகவே காஷ்மீரில் தீவிரவாதம் அதிகளவில் இருந்ததாகவும், புதுநோட்டுக்களை அதிகளவில் பெறுவதில் தீவிரவாதிகளுக்கு பல சிக்கல்கள் இருப்பதால் இனி காஷ்மீரில் தொடர்ந்து அமைதி நிலவ வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது 

Leave a Reply