ரூ.1கோடி வசூல் செய்த ஆயிரத்தில் ஒருவன். சென்னையில் வெற்றி விழா

mgr-mar14எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில் கடந்த 1965ஆம் ஆண்டு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம், நவீன டிஜிட்டலில் மாற்றப்பட்டு கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது. தற்பொது இந்த படம் 75வது நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

புதிய திரைப்படங்களுக்கு இணையாக வசூலை குவித்துள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதுவரை ரூ.1கோடி வசூல் செய்துள்ளதாகவும், இன்னும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால், விரைவில் 100வது நாளை இந்த படம் எட்டிப்பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை சத்யம் மற்றும் ஆல்பர்ட் தியேட்டர்களில் பகல் காட்சிகளாக இந்த படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே கப்பல் காட்சிகள் வித்தியாசமாக எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கருத்தாழமிக்க வசனங்கள், மெய்மறக்க வைக்கும் பாடல்கள் தற்கால இளைஞர்களையும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் 75வது நாள் வெற்றி விழா சமீபத்தில் சத்யம் தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் பி.ஆர்.பந்தலுவின் மகன் பி.ஆர்.ரவிசங்கர், திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், எம்.ஜி.ஆர் நற்பணி மன்ற தலைவர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply