ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டிலேயே 5ஜி ஸ்மார்ட்போன் – வெளியான சூப்பர் தகவல்

மத்திய தொலைத்தொடர்பு துறை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் மொபைல் ஆபரேட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் 5ஜி ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை வழங்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மூத்த அரசு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ரூ. 10 ஆயிரத்திற்கும் அதிக விலையில் 4ஜி போன்களை உருவாக்கும் பணிகளை நிறுத்துவதாக மொபைல் போன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பயனர்கள் எளிதில் 5ஜி சேவையை பயன்படுத்த வைக்கும் பணிகளில் ஈடுபடுவதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முன்னணி டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மொத்தம் 750 மில்லியனுக்கு்ா அதிகமான மொபைல் போன் பயனர்கள் உள்ளனர்.

இதில் 350 மில்லியனுக்கும் அதிகமானோர் 3ஜி மற்றும் 4ஜி வசதி கொண்ட சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 100 மில்லியனுக்கு்ம அதிகமானோர் 5ஜி ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளனர். ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் ரூ. 10 ஆயிரத்திற்கும் அதிக விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை குறைத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளன. சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் 5ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்த போதிலும், ஏராளமான நிறுவனங்கள் தங்களது சாதனங்களில் 5ஜி வசதியை வழங்கவில்லை.

டெஸ்டிங் நிறைவு பெற்றதும் 5ஜி சேவையை பயன்படுத்துவதற்கான அப்டேட் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும். டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவையை வெளியிட்டு வருகிறது.