ரூ.100ஐ நோக்கி செல்லும் பெட்ரோல் விலை: குறைய வாய்ப்பு உண்டா?
பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மக்கள் கடும் அவதியில் உள்ளனர். மாத வருமானத்தில் பெட்ரோலுக்கே பெரும்பகுதி செலவாகி வருவதால் பட்ஜெட்டில் துண்டு விழுவதால பலர் புலம்புகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் விலை இன்றும் 21 காசுகள் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.62 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.61 காசுகளாகவும் இன்றைய விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 21 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து உள்ளது.
பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடுவதற்குள் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்து பொதுமக்களின் பாரத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
பெட்ரோல், டீசல், விலை உயர்வு, பொதுமக்கள், அதிர்ச்சி,