ரூ.1,500 கோடி மதிப்புள்ள தமிழக அரசின் பத்திரங்கள் ஏலம்

Auction - Word and Gavel for Final Bidதமிழக அரசின் ரூ.1,500 கோடி மதிப்புள்ள 10 ஆண்டுகால பிணைய பத்திரங்கள் ஏலம் வரும் 9-ம் தேதி மும்பையில் நடக்க உள்ளதாக நிதித்துறை செயலர் க.சண்முகம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

தமிழக அரசின் பங்குகள் வடிவிலான ரூ.1,500 கோடி மதிப்புள்ள 10 ஆண்டு கால பிணைய பத்திரங்கள் ஏலம் மூலம் விற்கப்படுகின்றன. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை- கோட்டை அலுவலகத்தில் பிப்ரவரி 9-ம் தேதி நடக்கிறது.

பிப்ரவரி 9-ம் தேதி போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 முதல் 12 மணி வரையிலும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் 10.30 மணி முதல் 11.30 மணிக்குள்ளும் நடக்கும். ஏலக் கேட்புகளை இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Leave a Reply