ரூ.2000 சிறப்பு நிதியை நிறுத்த திமுக வழக்கு: அதிருப்தியில் பொதுமக்கள்

ரூ.2000 சிறப்பு நிதியை நிறுத்த திமுக வழக்கு: அதிருப்தியில் பொதுமக்கள்

தமிழக அரசு ரூ.2000 சிறப்புநிதி வழங்குவதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

ரூ.2000 சிறப்புநிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். ஏழைத் தொழிலாளர்களுக்கும் ️வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கும் இந்த ரூ.2000 சிறப்புநிதி வழங்கப்படுகிறது. இன்று நடைபெற்ற இதன் தொடக்கவிழாவில் முதல்வர், துணை முதல்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ரூ.2000 சிறப்பு நிதி திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு திமுக கோரிக்கை வைத்துள்ளது. மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்த பணம், தவறான வகையில் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது. ஆனால் ரூ.2000 கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் உள்ள மக்கள் திமுகவின் இந்த புகாரால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply