ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தியது தவறான நடவடிக்கை: நோபல் பரிசு பெற்றவர் டுவீட்

ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தியது தவறான நடவடிக்கை: நோபல் பரிசு பெற்றவர் டுவீட்

இந்தியாவில் ரூ.2000 நோட்டு அறிமுகப்படுத்தியது தவறான நடவடிக்கை என்று பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலர் தனது டுவிட்டரில் டுவிட் செய்துள்ளார்.

அதே நேரத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மதிப்பிழக்க செய்த நடவடிக்கை சரியானது என்று பாராட்டியுள்ள ரிச்சர்ட் தாலர், உயர் பண மதிப்பிழப்பு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வளமாக்குவதோடு, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்

சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் இவர் சென்ற ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இந்த டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே கருத்தைத்தான் முன்னாள் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரங்கராஜன், மற்றும் முன்னாள் நிதியமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, ப.சிதம்பரம் ஆகியோர் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply