ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்கு: நாளை விசாரணை
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் திட்டம் ஒன்றை அறிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இதுபோன்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.