ரூ.23,500 கோடி நிதி திரட்டியது உபெர்: கணிசமான தொகையை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டம்

ரூ.23,500 கோடி நிதி திரட்டியது உபெர்: கணிசமான தொகையை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டம்

10சர்வதேச நிறுவனமான உபெர் நிறுவனம் சவுதி அரேபியாவின் வெல்த் பண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.23,500 கோடி நிதி (350 பில்லியன் டாலர்) திரட்டி உள்ளது. இந்த நிதியில் கணிசமான தொகையை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்தியாவில் போட்டி நிறுவனமான ஓலாவை முந்துவதற்காக முதலீடு செய்ய இருப்பதாக தெரிகிறது.

சவுதி அரேபிய நிறுவனத்திடம் இருந்து ரூ.23,500 கோடி திரட்டியதன் மூலம் இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கு (6,250 கோடி டாலர்) மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வென்ச்சர் கேபிடல் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட நிறுவனங்களில் அதிக மதிப்புள்ள நிறுவனமான உபெர் நிறுவனம் மாறி இருக்கிறது.

கடந்த இரு வருடங்களாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறோம். இந்திய சந்தை எங்களுக்கு முக்கியமான சந்தையாகும். தொடர்ந்து இதே அளவில் வளர்ச்சி அடைவோம் என்று நம்புகிறோம். அந்த நிதியில் கணிசமான தொகையை இந்தியாவில் முதலீடு செய்வோம் என்று உபெர் இந்தியாவின் தலைவர் அமித் ஜெயின் கூறியிருக்கிறார்.

இது உபெர் நிறுவனத்துக்கு கிடைத்த நிதி. சர்வதேச சந்தை களில் முக்கியமான சந்தைகளில் முதலீடு செய்யப்படும் என்றார்.

உபெர் 2014-ம் ஆண்டு இந்தியாவில் நுழைந்தது. கடந்த வருடம் உபெர் நிறுவனம் இந்தியாவில் 100 கோடி டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தது. மேலும் 5 கோடி டாலர் முதலீட்டில் ஹைதராபாத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்தையும் அமைத்தது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து உபெர் நிறுவனத்துக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாகும். இப்போது உபெர் இந்தியாவில் 460 நகரங்களில் செயல்படுகிறது. இந்திய டாக்ஸி சந்தையில் 60 சதவீதத்துக்கு மேலான சந்தையை ஓலா வைத்திருக்கிறது.

உபெர் நிறுவனம் அதிக முதலீடு செய்ய இருப்பதால் ஓலா கூடுதல் நிதி திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை ஓலா நிறுவனம் இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply