ரூ.330 கோடிக்கு தீபாவளி மதுவிற்பனை: சாதனையா? சோதனையா?
நேற்றைய தீபாவளி தினத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.330 கோடிக்கு மதுவிற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி அன்று ரூ.260 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு ரூ.70 கோடி அதிகமாக விற்பனையாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று மது விற்பனை அதிகரித்து வருவது அரசின் சாதனையாக கருதக்கூடாது என்றும், தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாட மதுவில்லா தீபாவளி என்று கொண்டாடப்படுகிறதோ, அன்றே உண்மையான தீபாவளி என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
படிப்படியாக மதுவிற்பனையை குறைக்க வேண்டிய அரசு, மதுவிற்பனையை அதிகரித்து வருவது வருத்தத்திற்குரியதாக கருதப்படுகிறது.