ரூ.4,999 விலையில் ரெட்மி 5A ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்
சியோமி ஏற்கனவே அறிவித்ததை போன்று ‘தேஷ் கா ஸ்மார்ட்போன்’ சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி 5A என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது.
டிசம்பர் 7-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கும் ரெட்மி 5A ஸ்மார்ட்போன் முறையே ரூ.5,999 மற்றும் ரூ.6,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.com, பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி ரெட்மி 5A சிறப்பம்சங்கள்:
– 5.0 இன்ச் எச்டி 1280×720 பிக்சல் டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் சிப்செட்
– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
– 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– 3000 எம்ஏஎச் பேட்டரி
– 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், ஜிபிஎஸ்
– ஆண்ட்ராய்டு நௌக்கட் சார்ந்த MIUI 9
சியோமி ரெட்மி 5A ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி 4A ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான 5A வடிவமைப்பு பார்க்க ரெட்மி 4A போன்றே காட்சியளிக்கிறது. எனினும் முந்தைய பிளாஸ்டிக் வடிவமைப்பிற்கு மாற்றாக புதிய சாதனத்தில் மெட்டாலிக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
டார்க் கிரே, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கும் ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் 16 ஜிபி மெமரி கொண்ட மாடல் வாங்கும் முதல் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சம் சியோமி வாடிக்கையாளர்கள் புதிய ரெட்மி 5A ஸ்மார்ட்போனின் 16 ஜிபி மாடலை ரூ.4,999 விலையில் வாங்க முடியும்.