ரூ.50 லட்ச நிவாரண உதவி: ரசிகர் மன்றங்களுக்கு ரஜினி உத்தரவு
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு 50 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க தமது மன்றத்தினருக்கு, நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இது குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில், சமூக வலைத்தளத்தில், வெளியிடப்பட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்டவர்ளுக்கு, உடனடியாக உதவிட நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே திரையுலகை சேர்ந்த பலர் லட்சக்கணக்கில் கஜா புயல் நிவாரண நிதியாக அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.