ரூ.5000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 ஆண்ட்ராய்டு நௌக்கட் ஸ்மார்ட்போன்கள்
கடந்த மூன்று ஆண்டுகளில் கணக்கில் வராத பணம் ரூ.71,941 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆய்வுகள், சோதனை மற்றும் கணக்கில் வராத பணத்தை கையக்கப்படுத்துதல் மூலம் இந்த பணத்தைக் கண்டறிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, அதாவது கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி முதல் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி வரை மட்டும் கணக்கில் வராத பணம் ரூ.5,400 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 303.367 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளில் வருமான வரித்துறையினரால் 2,027 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் ரூ.36,051 கோடி கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டது. மேலும் ரூ.2,890 கோடி மதிப்பிலான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணமதிப்பு காலக்கட்டத்தில் 1,100 சோதனைகளை மேற்கொண்டது. இதன்மூலம் ரூ.610 கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது