ரூ.650 கோடி கருப்புப்பணம். முன்னாள் முதல்வர் மருமகனுக்கு சிக்கல்

ரூ.650 கோடி கருப்புப்பணம். முன்னாள் முதல்வர் மருமகனுக்கு சிக்கல்

சமீபத்தில் முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான்வரித்துறையினர் சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.650 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் அவரது மருமகனுக்கும் நெருக்கடி முற்றியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகியதால் அக்கட்சி தற்போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. பாஜகவில் இணைந்தும் பாஜக தலைமை இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை

இதனால் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அடுத்தகட்ட நிலை என்ன? என்பது புதிராக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Leave a Reply