ரூ.700 கோடி நிதி தருவதாக நாங்கள் சொல்லவில்லை: ஐக்கிய அரபு நாடு திடீர் பல்டி
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக நாங்கள் அறிவிக்கவில்லை என ஐக்கிய அரபு அமிரகம் மறுப்பு தெரிவித்து திடீர் பல்டி அடித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி வழங்க இருப்பதாகவும் இந்த நிதியை ஏற்க மறுத்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமிரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா கூறும்போது, ‘‘கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மறு சீரமைப்பு பணிக்கு தேவையான உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான குறிப்பிட்ட அளவு நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’’ என்றார்.