ரூ.8 லட்சம் மின்சார கட்டணம்: அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட காய்கறி கடைக்காரர்

ரூ.8 லட்சம் மின்சார கட்டணம்: அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட காய்கறி கடைக்காரர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு காய்கறி கடைக்காரர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் சுமார் ஆயிரம் ரூபாய் மட்டுமே மின்சார கட்டணம் செலுத்தி வந்த நிலையில் திடீரென ரூ.8 லட்சம் மின்சார கட்டணம் வந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெகநாத் ஷெல்கி என்ற 36 வயதே ஆன அந்த நபரின் மரணத்திற்கு மின்சார இலாகா ஊழியர்களின் அலட்சியே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், ஷெல்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், மின்சார கட்டணம் அதிகமாக வந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில், மின்சார அலுவலக ஊழியர், மின்சார பயன்பாட்டு அளவில் குறித்துள்ள எண்ணில் ஒரு புள்ளியை மாற்றி வைத்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம் என தெரிய வந்தது.

இரண்டாயிரம் ரூபாய்க்கு வந்த மின்சார கட்டணத்தை 8 லட்சம் ரூபாய் என குறித்த மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் ஷெல்கி இறந்தது அவரது உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மின்சார அளவில் தவறாக பதிவிட்ட ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டதாகவும், அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் ஜெகநாத் ஷெல்கியின் உறவினர்கள் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வகையில் அவரது உடலை தகனம் செய்ய மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply