ரூ1 கோடி இட்லி செலவு குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரிக்கா வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் *
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவருடைய உணவு செலவு மட்டும் ரூ.1 கோடியை தாண்டியதாக செய்திகள் வெளிவந்தது. பல நாட்கள் ஜெயலலிதா மயக்கத்தில் இருந்ததாகவும், அவர் சாப்பிட்ட ஒரு இட்லிக்கும் இரண்டு இட்லிக்கும் எப்படி ரூ.1 கோடி பில் வரும் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டலடித்தனர்.
இந்த நிலையில் சசிகலாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கியிருந்து சாப்பிடதால் தான் ரூ1 கோடிக்கு மேல் செலவு வந்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்ற அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து வரவேற்கத்தக்கது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜெயலலிதாவின் மர்மமரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.