ரேஷன் அரிசி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரேஷன் அரிசி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தேர்தல் லாபத்திற்காக ரேஷன் கடையில் அனைவருக்கும் அரிசி வழங்கப்படுவதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தேர்தல் லாபத்திற்காக இலவசங்களை வழங்கி மக்களை கையேந்த வைப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச ரேஷன் அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply