மதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா பாதிப்பு கால நிவாரணமாக தலா 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
சென்னை-ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்தது.
இரண்டாவது தவணை 2,000 ரூபாயுடன் 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் தரப்பட்டது.
இவற்றை, மே, ஜூனில் வாங்காதவர்கள், ஜூலை வரை வாங்கிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. மொத்த கார்டுதாரர்களில் 99 சதவீதம் பேர் நிவாரண தொகுப்பை வாங்கியுள்ளனர்.
இன்னும் சிலர் வாங்காத நிலையில், இந்த மாதம் முதல் கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்தது.
இதனால், மீதமுள்ள மளிகை தொகுப்பை பொது பயன்பாட்டுக்கு மாற்றவும், மீதமுள்ள நிவாரண தொகையை ஒப்படைக்கும் படியும், மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, உணவு வழங்கல் துறை ஆணையர் சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.