ரோந்து சென்ற சி.ஆர்.பி.எப் வீரர்களின் மனிதநேயமான செயல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள், சாலை வசதி, போக்குவரத்து வசதியில்லாத ஒரு கிராமத்தில் 13 வயது சிறுவன் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை கண்டனர்.
உடனடியாக அந்த சிறுவனை 8 கி.மீ தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த சிறுவனுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவனுக்கு மஞ்சள்காமாலை இருப்பது தெரியவந்தது. சரியான நேரத்தில் சி.ஆர்.பி.எப் மருத்துவமனையில் சேர்த்ததால் அந்த சிறுவன் தற்போது உயிர் பிழைத்துள்ளான்.
மனிதநேயம் மிகுந்த இந்த செயலை செய்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது