ரோஹித் சர்மா சதம்: 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா

ரோஹித் சர்மா சதம்: 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே இந்தியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெற்ற 5வது போட்டியிலும் வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 242 ரன்கள் எடுத்தது.

வெற்றி பெற 243 என்ற எளிய இலக்கை நோக்கி விரட்டிய இந்தியா 42.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 243 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 125 ரன்களும், ரஹானே 61 ரன்களும் கேப்டன் விராத் கோஹ்லி 39 ரன்களும் எடுத்தனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி-20 போட்டி அக்டோபர் 7ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.

Leave a Reply