லட்சுமி கடாட்சம் தரும் ஆடிப்பெருக்கு

லட்சுமி கடாட்சம் தரும் ஆடிப்பெருக்கு

1ஆடிப்பெருக்கன்று தங்க நகைகள், வெள்ளி, பாத்திரங்கள் என வாங்கி வைத்துக் கொண்டால் ஆண்டு முழுவதும் வற்றாத செல்வத்துடன் வாழ்வர் என்ற மரபு உருவாக்கப்பட்டது. ஆடிப்பெருக்கன்று செய்யும் தானம் பலகோடி மதிப்புள்ளது.

லட்சுமி கடாட்சம் தரும் ஆடிப்பெருக்கு
ஆடி மாதத்தில் லட்சுமி கண்கொட்டாமல் விழித்திருப்பதால் அவளது முழுப்பார்வையும் இவ்வுலகின் மீது படுகிறது. பிறகென்ன… லட்சுமி கடாட்சம் இம்மாதம் முழுவதுமே இருக்கிறது. அதிலும் ஆடிப்பெருக்கன்று தங்க நகைகள், வெள்ளி, பாத்திரங்கள் என வாங்கி வைத்துக் கொண்டால் ஆண்டு முழுவதும் வற்றாத செல்வத்துடன் வாழ்வர் என்ற மரபு உருவாக்கப்பட்டது.

லட்சுமியின் அவதார மாதமாக ஆடி கருதப்படுகிறது. ஏனெனில் அவளது அவதாரமான ஆண்டாள் ஆடிப்பூரத்தன்றுதான் அவதரித்தாள். எனவே ஆடியில் பொருட்கள் வாங்குவது அது பல்கிப் பெருகுவதற்கு வழிவகுக்கும். ஆடிப்பெருக்கன்று பொருட்கள் வாங்குவது இன்னும் விசேஷம்.

தானம் கொடுங்கள் :

ஆடிப்பெருக்கன்று செய்யும் தானம் பலகோடி மதிப்புள்ளது. தானப் பொருட்களையும் வழங்குவதில் ஏற்படும் பலன்கள்.

தங்கம்: வறுமை நீங்கும்,
வெள்ளி: தோல் நோய் நீங்கும். குழந்தைகளுக்கு படிப்பாற்றல் பெருகும்,
ஆடைகள்: உஷ்ண நோய் வராது.
உணவு: வற்றாத செல்வம்,
குடை: உஷ்ண நோய் வராது
ஊன்றுகோல்: மூட்டுவலி வராது,
விளக்கு: திருடர் பயம் இல்லை.
செருப்பு: கால் வலி தாக்காது.

Leave a Reply