லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான அணிக்கும், ஷார்ன் வார்னே தலைமையிலான அணிக்கும் இடையே நடந்த காட்சி கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் அணி அபார வெற்றி பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தின் 200–வது ஆண்டு விழாவை போற்றும் வகையில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான எம்.சி.சி அணிக்கும், ஷேன் வார்னே தலைமையிலான உலக லெவன் அணிக்கும் இடையே நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் 50 ஓவர் கொண்ட காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்று நடந்தது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஷார்ன் வார்னே தலைமையிலான உலக லெவன் அணியில் ஷேவாக் மற்றும் கில்கிறிஸ்ட் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்தது. யுவராஜ்சிங் மிக அபாரமாக பேட்டிங் செய்து 132 ரன்களை 134 பந்துகளில் எடுத்தார்.
பின்னர் 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சச்சின் தெண்டுல்கர் அணி 45.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 296 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் மிக அபாரமாக விளையாடி 145 பந்துகளில் 181 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் சச்சின் 44 ரன்கள் எடுத்தபோது முரளிதரன் பந்தில் போல்ட் ஆனார்.
ஸ்கோர் விபரம்:
உலக IX அணி:
கில்கிறிஸ்ட் 29
சேவாக் 22
இக்பால் 1
பீட்டர்சன் 10
யுவராஜ்சிங் 132
அப்ரிடி 0
பால் கூலிங்டன் 40
பீட்டர் சிடில் 33
ஷார்ன் வார்னே 3
உதிரிகள் 23
மொத்தம் 293
எம்.சி.சி. அணி
ஆரோன் பின்ச் 181
சச்சின் 44
லாரா 23
டிராவிட் 0
சந்தர்பால் 37
உதிரிகள் 11
மொத்தம் 296