லாஸ்வேகாஸ் துப்பாக்கி சூடு: நேரில் பார்த்த தமிழர் பேட்டி

லாஸ்வேகாஸ் துப்பாக்கி சூடு: நேரில் பார்த்த தமிழர் பேட்டி

நேற்றிரவு அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற கொடூரமான துப்பாக்கி சூடு தாக்குதலில் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தமிழர் குமார் என்பவர் கூறியபோது, ‘லாஸ்வேகாஸ் இசை நிகழ்ச்சியை பார்க்க வந்த ஆயிரக்கணக்கானோர்களில் நானும் ஒருவன். சுமார் 3000க்கும் மேற்பட்டோர் இசை நிகழ்ச்சியை ரசித்து கொண்டிருந்தபோது திடீரென அருகில் உள்ள விடுதி ஒன்றின் 32வது மாடியில் இருந்து ஒருவன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான். யாரையும் குறிவைத்து சுடாமல் கண்மூடித்தனமான சுட்டதால் பலர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இதனால் அச்சத்தில் மக்கள் பதறி ஓடினர். தீவிரவாதி சுட்ட துப்பாக்கி அதிநவீன, அதிக தூரத்தை மிக விரைவாக தாக்கக்கூடியதாக இருந்ததால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை உயர்ந்துள்ளது’ என்று கூறினார்,

Leave a Reply