லிப்ஸ்டிக்கில் ரகசிய கேமிரா: அந்தரங்க காட்சிகளை படமாக்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த 4 பெண்கள்

லிப்ஸ்டிக்கில் ரகசிய கேமிரா: அந்தரங்க காட்சிகளை படமாக்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த 4 பெண்கள்

லிப்ஸ்டிக் உள்பட பல்வேறு பொருட்களில் ரகசிய கேமிரா வைத்து விவிஐபிக்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய 4 பெண்கள் கொண்ட மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.,

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் மற்றும் போபால் ஆகிய பகுதியை சேர்ந்த நான்கு பெண்கள் அரசியல் தலைவர்கள், காவல் அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோர்களின் பாலியல் நடவடிக்கைக் காட்சிகளை ரகசியமாக படம் பிடித்து பின்னர் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார் 4 பெண்கள் கொண்ட மோசடி கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் லிப்ஸ்டிக், செல்போன்கள் மற்றும் கண்ணாடிகளில் ரகசிய கேமராக்களை அமைத்து விவிஐபிக்களின் அந்தரங்க காட்சிகளை படம் எடுத்ததாகவும் இதன்மூலம் கடந்த ஒருசில ஆண்டுகளில் சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறித்தாதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Leave a Reply