இந்திய வெளியுறவு துறை அமைச்சராக பொறுபேற்றுள்ள சுஷ்மாஸ்வராஜ், தனது வெளிநாட்டு பயணமான பூடான் பயணத்தை வெற்றிகரமாக முடித்தபின்னர் தற்போது இரண்டாவது பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். அங்கு வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனாவுடன் இருநாட்டு நல்லுறவுகள் மற்றும் ஒருசில ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
நேற்றிரவு வங்கதேச தலைநகர் டாக்கா சென்ற சுஷ்மா ஸ்வராஜையும், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங்கையும் வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் ஹசன் முகமது அலி வரவேற்றார்.
கடந்த ஆட்சியில் வங்கதேசத்துடனான தீஸ்தா ஒப்பந்தத்தில் கையெழுத்திட காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் தடுக்கப்பட்டது.
இந்நிலையில், சுஷ்மா வங்கதேச பயணத்தின் போது, அதே ஒப்பந்தமான தீஸ்தா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையொட்டி சுஷ்மா நேற்றிரவு மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
.