வங்கிகள் திவாலானால் வாடிக்கையாளரின் கதி என்ன? பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் வங்கிகள் திவாலானால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் இழப்பீடு குறித்து அறிவித்துள்ளார்.
அதன்படி வங்கிகள் திவாலானால் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது என்றும், தற்போது காப்பீடு தொகை ரூ.1 லட்சமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயம் செதிருப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.