வங்கிக்கடன் வேண்டுமா? இன்று போனால் உடனே கிடைக்கும்
நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடியாக வங்கிக் கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது
பண்டிகைக் காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு உடனடி கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு செய்துள்ளன.
இதில் சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை இன்று உடனடியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது