வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி

வங்கி கணக்குகள் வைத்துள்ள ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் வரும் 2020, ஜனவரி, 1ஆம் தேதிக்குள், கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும் அதன்பின்னர் அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ, ‘ஆன்லைன்’ மூலமோ, பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என்றும் ஆர்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகள், எட்டு ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், ‘கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கு சென்று, அங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சுய விபரக்குறிப்பில் மாற்றம் எதுவும் இல்லாத வாடிக்கையாளர்கள், வங்கியின் இணைய தளத்தில், ‘கே.ஒய்.சி.,யில் மாற்றமில்லை’ என்ற இணைப்பை, ‘கிளிக்’செய்வதன் மூலம், புதுப்பிக்கும் பணியை செய்து கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்கவும், வங்கி கணக்கு மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply