வசந்தகுமார் கைது, அரசின் சதி: காங்கிரஸ் எச்சரிக்கை

வசந்தகுமார் கைது, அரசின் சதி: காங்கிரஸ் எச்சரிக்கை

தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏவுமான திரு வசந்தகுமார் அவர்கள் கைது அதிமுக அரசின் சதி என்றூம், இது முழுக்க முழுக்க திசைதிருப்பும் முயற்சி என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது

இந்த நடவடிக்கையின் மூலம் வாக்குசாவடிகளை கைப்பற்ற முயற்சி நடப்பதாகவும், எனவே காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சி தோழர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டுகிறோம் என்றும் காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னதாக இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் நாங்குநேரி தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வசந்தகுமார் எம்பி தொகுதியின் உள்ளே வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

வசந்தகுமார், நாங்குநேரி, தேர்தல், போலீஸ், காங்கிரஸ்,

Leave a Reply