வசந்தகுமார் கொரோனாவால் மரணம் அடையவில்லை:

நெகட்டிவ் ரிசல்ட் என மகன் தகவல்

நேற்று மறைந்த கன்னியாகுமரி எம்.பி எச்.வசந்தகுமார் அவர்கள் கொரோனாவால் மரணம் அடையவில்லை என்றும் மறைவுக்கு முன் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த தகவலை வசந்தகுமார் மகனும் நடிகருமான விஜய் வசந்த் உறுதி செய்துள்ளார். இதனால் கொரோனாவால் மறைந்தவருக்கான கெடுபிடிகள் எதுவும் வசந்தகுமார் இறுதிச்சடங்கில் இருக்காது என்றும் அனைவருக்கும் இறுதியஞ்சலி செலுத்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வசந்தகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அவர் கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டதாகவும், இணை நோயினால் தான் அவர் மறைந்ததாகவும் அவரது மகன் தெரிவித்தார்.

Leave a Reply