வடசென்னையின் நீளமான ரன்னிங் டைம்
சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் சராசரியாக இரண்டரை மணி நேர ரன்னிங் டைமை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியாகவிருக்கும் ‘வடசென்னை’ திரைப்படம் 166 நிமிடங்கள் அதாவது இரண்டே முக்கால் மணி நேர ரன்னிங் டைமை பெற்றுள்ளது.
இருப்பினும் ‘வடசென்னை’ திரைப்படம் தனுஷின் கனவுப்படம் என்பதால் நிச்சயம் அதிகமான ரன்னிங் டைம் ஒரு குறையாக தெரியாது என்றே கருதப்படுகிறது.
மேலும் சுவாரஸ்யமான காட்சிகளுடன் படம் அமைந்திருந்தால் நீளமான ரன்னிங் டைமும் ஒரு பிளஸ் ஆகவும் கருதப்படும் வாய்ப்பு உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.