வனிதாவை மீண்டும் வெளியேற்றிய ஆடியன்ஸ்
பிக்பாஸ் வீட்டில் வனிதாவால் பல போட்டியாளர்கள் வெளியேறினார்கள். அவரது வத்திக்குச்சி வேலையால் சாக்சி, அபிராமி, மதுமிதா ஆகியோர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் பிக்பாஸ் தயவால் மீண்டும் வந்த வனிதா இன்று வெளியேறுகிறார்.
இந்த வாரம் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகிய ஐவர் எவிக்சன் பட்டியலில் இருந்த நிலையில் கவின், சாண்டி, தர்ஷன், ஆகிய மூவரும் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டனர். ஷெரின் மற்றும் வனிதா குறைந்த வாக்குகள் பெற்றிருந்தாலும் வனிதா மிகக்குறைவான வாக்குகளை பெற்றதால் வெளியேற்றப்படுகிறார்.
ஷெரின் – தர்ஷன் விவகாரத்தில் வனிதாவின் தலையீடு எல்லை மீறியதே அவர் இன்று வெளியேற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.