வனிதா செய்தால் நியாயம், கவின் செய்தால் தப்பா?

வனிதா செய்தால் நியாயம், கவின் செய்தால் தப்பா?

பிக்பாஸ் என்பது ஒரு போட்டி நிகழ்ச்சி இதில் செண்டிமெண்டுக்கும் இடமில்லை, யாரும் யாருக்கும் சப்போர்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறி வரும் வனிதா, ஒரு கட்டத்தில் சேரன் ஜெயித்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார். தான் ஜெயிக்க வேண்டும் என்று கூறாமல் சேரன் வெற்றி பெறவேண்டும் என்று வனிதா கூறுவது மட்டும் நியாயமாம், ஆனால் கவின் தனது நண்பர்களில் ஒருவர் ஜெயிக்க வேண்டும் என்று கூறினால் மட்டும் தவறா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் கவின் நண்பனுக்காக விட்டுக்கொடுப்பது என்பது அவரது போட்டி தந்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதேபோல் பிக்பாஸ் என்பது ஒரு ஒலிம்பிக் போட்டி என்பது போல் ‘இதில் நீ ஜெயிச்சே ஆகவேண்டும் என்று ஷெரினிடம் சாக்சி கூறுவதும் நகைப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது

 

Leave a Reply