வனிதா சொன்னது உண்மைதானா? தர்ஷன் வெளியேற ஷெரின் காரணமா?
தர்ஷன் விலகி விலகி போனபோதிலும் ஷெரின் அவரை விரட்டி விரட்டி காதலிப்பதாகவும், இதனால் தர்ஷனுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கூறினார்.
அதேபோல் தர்ஷன் எதிர்பாராத வகையில் கடந்த ஞாயிறு அன்று வெளியேறியதை சுட்டிக்காட்டிய வனிதா, ‘நான் சொன்னது உண்மை என இப்போது தெரிந்ததா? என இன்று சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது தெரிவித்தார்.
தர்ஷன் வெளியேறிதற்கான காரணம் புரியாமல் ஷெரின் உள்பட நால்வரும் குழப்பத்தில் இருக்கும் நிலையில் வனிதாவின் இந்த கருத்து ஷெரினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தர்ஷன் வெளியேற நான் காரணமாக என அவர் கதறி அழ, அவரை கஸ்தூரி தேற்றுகிறார்.
தர்ஷன் வெளியேறியதற்கு பிக்பாஸ் தான் காரணம் என்பதை தெரியாமல் அனைவரும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்,