வயிற்றிலுள்ள குழந்தைக்கும் எச்.ஐ.வி.பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: அதிர்ச்சி தகவல்
விருதுநகரில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு தவறுதலாக எச்.ஐ.வி பாதிப்புள்ளவரின் ரத்தத்தை ஏற்றியுள்ளதால் அவருடைய வயிற்றிலுள்ள குழந்தைக்கும் எச்.ஐ.வி.பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் சண்முகராஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இந்த நிலையில் எச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அரசை நம்பி, அரசு மருத்துவமனைக்கு சென்றோம். என்னை உயிரோடு இந்த இந்த அரசு மருத்துவத்துறை கொன்றுக்கொண்டு இருக்கிறது என எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.