வரலட்சுமி விமர்சனத்திற்கு விஷால் பதிலடி!
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் சமீபத்தில் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ குறித்து நடிகை வரலட்சுமியும் நடிகை ராதிகாவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இதுகுறித்து விஷால் கருத்து கூறியதாவது:
வரலட்சுமி போன்ற எல்லா நண்பர்களுக்கும் கோபம் இருக்கும். யார் எது வேண்டுமானாலும் பேச அதிகாரம் இருக்கு. அதை சட்டமே சொல்லுகிறது. தனிப்பட்ட முறையில் நானும் நண்பர்கள் மீது கோபப்படலாம். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு’ என்று விஷால் கூறினார்.
மேலும் ஒன்றுமே செய்யவில்லை என ராதிகா கேள்வி எழுப்பினார். உண்மைகளை வெளிப்படுத்தவே வீடியோ வெளியிட்டோம். தவறு நடந்திருந்தால் சங்கம் மூலமாகவோ, சட்ட ரீதியாகவோ தண்டனை பெற்று தருவோம் என்பதையே தெரிவித்திருந்தோம்