வரலாற்று வரைபடங்கள் வேண்டுமா? அதற்கும் ஒரு செயலி வந்துவிட்டது

வரலாற்று வரைபடங்கள் வேண்டுமா? அதற்கும் ஒரு செயலி வந்துவிட்டது

வரலாறு படிக்கும் மாணவர்களுக்கும், வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும் வரலாற்று வரைபடங்கள் நிச்சயம் தேவைப்படும். இதற்கென ஒரு சூப்பரான செயலி வந்துவிட்டது. அதுகுறித்து தற்போது பார்ப்போம்

வரைபடங்கள் மீது, அதிலும் வரலாற்றுக் கால வரைபடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஓல்டுமேப்ஸ்ஆன்லைன் இணையதளம் ஏற்றதாக இருக்கும். பெயர் உணர்த்துவதுபோலவே இந்தத் தளம் பழைய வரைபடங்களின் இருப்பிடம்.

இந்தத் தளத்தில் வரலாற்றுக் கால வரைபடங்களைத் தேடிப்பார்க்கலாம். வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டம் அல்லது குறிப்பிட்ட இடத்தைத் தெரிவித்துத் தேடும் வசதி இருக்கிறது. தேடலில் ஈடுபடும்போதே அந்தக் கால சென்னை தொடர்பான பல்வேறு வரைபடங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. தென்னக ரெயில்வே, தென்னிந்தியா, மலபார், கோரமண்டல் எனப் பல விதமான வரைபடங்களைப் பார்க்க முடிகிறது.

வரலாற்று ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்தத் தளம் பொக்கிஷமாக அமையும். வரைபடங்களை அச்சிட்டுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலி வடிவமும் இருக்கிறது.

Leave a Reply